முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் 18வது சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது

கொரோனோ தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தொடர் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று 18 வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்துகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்து வரும் நிலையில் நேற்றை நிலவரப்படி 1,17,100 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 85,962 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் 6,983 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,251 ஆக அதிகரித்தது.

இந்த சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜன.16 தொடங்கி தொடர் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னை அடையாறில் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளரக்ளுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கணக்கீட்டின்படி ஏறத்தாழ 4 லட்சம் பேர் பூஸ்டர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஜன.10ம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதேபோல முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதின் கீழ் கொரோனா, கருப்பு பூஞ்சை உள்ளி நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு ரூ.72 ஆயிரம் வருமான உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்களுக்கு இந்த உச்சவரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுமார் 1,440 பத்திரிகையாளர்கள் பயன்பெறுவாரகள் என்றும் இவர்களுக்கான சிறப்பு அடையாள அட்டையை முதலமைச்சர் ஜன.10ம் தேதி வழங்குவார் என்றும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

Saravana

மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

Gayathri Venkatesan

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலினுக்கு அற்புதமம்மாள் நன்றி

Vandhana