கர்நாடக மாநிலம் சிவாஜி நகரில் 100 ஆண்டுகள் பழமையான பள்ளியை புரனமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.
தமிழ் வழியில் கல்வி கற்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தனியார் பள்ளிகளின் மீதான பெற்றோர்களின் மோகம் அதிகரித்து வருவதாக மொழியியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு காரணமாக தற்போது மீண்டும் அரசு பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் மெள்ள நகரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பத்தில் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிடப் பல்கலைக்கழகத்திலும், டெல்லியிலுள்ள, புது டெல்லி பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைகள் மூடப்படும் அபாயம் மேலெழுந்ததாக தகவல்கள் வெளியாகின.
https://twitter.com/ArshadRizwan/status/1479454778023235586
டெல்லி பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சரிசெய்ய வேண்டுமென திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதினார்.
ஆக இப்படியான சூழலில் கர்நாடக மாநிலம் சிவாஜி நகரில் 100 ஆண்டுகள் பழமையான பள்ளியை புரனமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷாத்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கதில், “100 ஆண்டுகளுக்குப் பிறகு எம்எல்ஏ தொகுதி நிதியுடன் எல்&டி உதவியோடு கட்டப்பட்டு வரும் இந்தப் பள்ளி, இந்திய உள்துறை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.







