ஆசிரியர் தேர்வு தமிழகம்

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இயக்குநர் உதயகுமார் கூறும்போது, 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும், அனைவரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என கூறிய அவர் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் நன்றி தெரிவிப்பதாக இயக்குனர் உதயகுமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குடிபோதையில் படுத்து உறங்கிய திருடன்!

Jayapriya

வாத்தி கம்மிங் பாடல் ஒரே நாளில் சாதனை!

Niruban Chakkaaravarthi

பட்டு பட்டுனு அடிங்கப்பா…. – துரைமுருகன் ஆவேசம்

EZHILARASAN D

Leave a Reply