அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அவர், தாய்மார்களுக்கு…

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அவர், தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மினி கிளினிக் திட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தார்.

விரைவில் புதிய மருத்துவர் பணியிடங்களுக்காக 2000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply