“மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாரியென பிறந்தாள் வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள்,…

மாரியென பிறந்தாள் வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி! பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.