தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சந்தானள்புரம் புனித அன்னம்மாள் ஆலயத்தின் 105வது திருத்தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சந்தானள்புரத்தில் அமைந்துள்ளது அன்னை புனித அன்னம்மாள் ஆலயம்.நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 105வது திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 17ம் தேதி தொடங்கியது.
திருவிழாவையொட்டி கடந்த திங்கட்கிழமை அன்று கூட்டுத்திருப்பலியும்,வனத்து சின்னப்பரின் அன்னதானமும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை அன்று விழாவின் சிகர நிகழ்வான சம்மனசு வனத்து சின்னப்பர் மற்றும் புனித அன்னம்மாள் ஆகியோர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர திருத்தேரில் பவனி வரும் விழா நடைபெற்றது.
இதில் பங்கு தந்தையர்கள்,அருட்சகோதரிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
–வேந்தன்







