சென்னை பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள தனியாா் கல்லூரி மாணவிகளுக்கு மகளின் விருப்பப்படி, சுயமாக தயாரிக்கும் நாப்கின் இயந்திரத்தை அமேசன் இந்திய தலைவர் நேரடியாக வழங்கினார்.
அமேசன் இந்தியா தலைவர் அமித் அகர்வால் இவரது மகள் ஆஷி, பெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் இயந்திரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இயற்கையாக பெண்களே சொந்தமாக தயாரிக்கும் நாப்கின் இயந்திரங்களை பலருக்கு வழங்கி வருகின்றார்.
அந்த வகையில் சென்னை வந்த அமேசன் இந்தியா தலைவர் அமித் அகர்வால்
சென்னை பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் மகள் ஆஷியின் விருப்பப்படி, பெண்களே சுயமான தாயாரிக்கும் நாப்கின் இயந்திரத்தை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமேசன் இந்தியா தலைவர் அமித் அகர்வால் கலந்து கொண்டு நாப்கின் தாயாரிக்கும் இயந்திரத்தை மாணவிகளிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அமேசன் இந்தியா தலைவரிடம் கலந்துரையாடினர்.
அப்போது மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். பின்னர் கல்லூரி வளாகத்தில் பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியிலும் அமேசன் இந்தியா தலைவர் அமித் அகர்வால் கலந்துகொண்டு, மாணவ, மாணவியர் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த், கல்லூரி முதல்வர் டாக்டர் திருமுருகன், துணை முதல்வர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரூபி.காமராஜ்







