மணிப்பூர் வீடியோ விவகாரம் : சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள்  600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா…

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள்  600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு வெடித்த  மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் 2மாதமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த காணொலி வெளியான நிலையில் நாடு முழுவதும்  கடும் கண்டனம் எழுந்தது. இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.  மணிப்பூர் பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இதுவரை 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 7பேரில் ஒருவர் பதினெட்டு வயதிற்கு குறைவான சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் வீடியோ தொடர்பாக இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் மணிப்பூர் வீடியோ விவகாரத்தை கண்டித்து கல்லூரி வாயில் முன்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

https://twitter.com/news7tamil/status/1684093739852238849

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.