இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இறுதிபோட்டி மே.31 ஆம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎலை தொடர்ந்து ஜூன் மாதம் இந்திய அணி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு நாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ஷுப்மன் கில்லும் துணை கேப்டனாக கே.எல். ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் போட்டிகளுக்கான அணி விவரம்
சுப்மன் கில் (C), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (VC), கே.எல். ராகுல் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

டெஸ்ட் போட்டிக்கான அணி விவரம்
சுப்மன் கில் (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (வி.சி.), சாய் சுதர்சன், ரிஷப் பந்த் (WK), தேவ்தட் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல் (WK).








