தங்கலான் படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான். ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது. படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் விக்ரம் குணமாகிய நிலையில் படப்படிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட தொகையைத் தாண்டி ரூ.100 கோடிக்கும் மேல் செலவானதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
A fiery story of a bygone era that’s waiting to be told & cherished
#Thangalaan teaser dropping on 1st November
&#Thangalaan arriving at cinemas worldwide on 26th January, 2024@Thangalaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_… pic.twitter.com/pDfT6HiNs4
— Vikram (@chiyaan) October 27, 2023
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தங்கலான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 1-ம் தேதி வெளியகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







