முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

துணிவு vs வாரிசு ட்ரெய்லர் – 24 மணி நேர போட்டியில் அஜித் வெற்றி

வெளியான 24 மணி அதிகமான பார்வைகளை பெறும் போட்டியில், வாரிசு படத்தின் ட்ரெய்லரை துணிவு பட ட்ரெய்லர் வெற்றி பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு, அஜித்குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இரு படங்களுமே ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால், எந்த படம் வெற்றி பெரும் என்பதைத் தாண்டி, எந்த படத்தை எந்த படம் வீழ்த்தும் என்றே இரு நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான துணிவு ட்ரெய்லர், கலவையான விமர்சனங்களைப் பெற்று, யூடியூபில் அதிகமான பார்வைகளைக் குவித்து வந்தது. மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், விஜய்யின் வாரிசு பட ட்ரெய்லர் நேற்று வெளியானது. குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக, செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல் என கலவையான காட்சிகளுடன் வெளியான இந்த ட்ரெய்லரும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, வெளியான 24 மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில், துணிவு பட ட்ரெய்லர் வெற்றி பெற்றுள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் 2.3 கோடி பார்வைகளைக் கடந்திருக்கும் நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் 2.5 கோடி பார்வைகளைக் கடந்திருந்தது.

வாரிசு பட தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லர் ஒட்டு மொத்தமாக 3.2 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதும், யூடியூப் ட்ரெண்டிங்கில் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளி வாரிசு பட ட்ரெய்லர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதும், வெளியான ஒரு மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில் வாரிசு படமே வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ.7 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் Citroën எஸ்யூவி கார்!

Arun

ரூ.111 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 840 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Web Editor

வீடு தேடி சென்ற காதலன்… விஷம் கொடுத்த காதலி…

G SaravanaKumar