தமிழ்நாட்டில் 4 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

நான்கு லட்சம் காலி பணியிடங்கள் இன்னும் தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அரசு காலிப் பணியிடங்களை…

நான்கு லட்சம் காலி பணியிடங்கள் இன்னும் தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று சொல்லிவிட்டு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றக்கூடிய முயற்சிகளை  தமிழக அரசு செயல்படுத்தி  கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டினார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு  முன் வரவில்லை என்று குறிப்பிட்ட அவர்,  அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக கூறினார். ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைள் குறித்து விவாதிக்க தமிழக அரசு தயங்குவதாகவும் அவர் கூறினார்.

அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியும் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு

முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையாவது அதிமுக ஆட்சியில் கிடைத்தது தற்போது அது கூட திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை.  எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.