முக்கியச் செய்திகள் உலகம்

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகாலை 2 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீ. ஆழத்தில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்- முதலமைச்சர் மாணிக் ஷாகா

அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் திடீரென வீடுகள் குலுங்கியதால் அச்சத்தில் உறைந்தனர். இதனால் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 41,000 பேர் பலியாகினர். துருக்கியில் இந்த மாதத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் நேற்று நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஈஷா யோகா மையம்

Yuthi

“டோண்ட் லுக் அப்” படத்தை பாராட்டிய கவிஞர் வைரமுத்து

G SaravanaKumar

இரவு விருந்தளித்த காதலி; வீடு புகுந்து தாக்கிய முன்னாள் காதலன்

EZHILARASAN D