திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்த மாநில முதலமைச்சர் மாணிக் ஷாகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.








