தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

வரலாற்று சிறப்புமிக்க தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று சாமி தாிசனம் செய்தனர். மாதத்திற்கு இரு முறை அதாவது பௌர்ணமி தினத்திற்கு 3 நாள்களுக்கு…

வரலாற்று சிறப்புமிக்க தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று சாமி தாிசனம் செய்தனர்.

மாதத்திற்கு இரு முறை அதாவது பௌர்ணமி தினத்திற்கு 3 நாள்களுக்கு முன்பும், அமாவாசை தினத்திற்கு 3 நாள்களுக்கு முன்பும் பிரதோஷ நிகழ்வானது வரும் சூழலில், அன்றைய தினங்களில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆடி மாத பிரதோஷ நிகழ்வானது வெகு சிறப்பாக சிவாலயங்களில்
வழிபாடு செய்யப்பட்டு வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள வரலாற்று
சிறப்பு மிக்க காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நிகழ்வானது வெகு
சிறப்பாக நடைபெற்றது.

மேலும் ஏராளமான பக்தர்கள் இந்த பிரதோஷ நிகழ்வில் பங்கேற்ற நிலையில், நந்தி பகவானுக்கு பால், பன்னீர், பழங்கள், பூக்கள், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களில் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைதொடர்ந்து, சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், சப்பர வீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.