வியட்நாமைச் சேர்ந்த வூ டியன் சி தனது பேஸ்புக் பக்கத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்ததால் வியட்நாம் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
வியட்நாமின் கம்யூனிஸ்ட் அரசு தனக்கு எதிராகத் தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே வூ டியன் சி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசுக்கு எதிரான பதிவுகளைப் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவர் இத்தகைய 338 பதிவுகள் மற்றும் 181 வீடியோகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.சமீபகாலங்களில் வியட்நாம் அரசு தனக்கு எதிராகச் செயல்படும் அரசியல்வாதிகள் மற்றும் சமூகப் போராளிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிகைளை எடுத்துள்ளது.
இவரைத் தொடர்ந்து இன்னும் மூன்று பேர் இதே சட்டத்தின் கீழ் கைது வியட்நாம் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







