தொகுதியின் அடையாளத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வாக்களர்கள் கையில் இருப்பதாக கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள லட்சுமி மில் காலனி, இந்திரா நகர், சீனிவாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், இது வாக்காளர்களுக்கான தேர்தல் என்று கூறினார். ஐந்தாண்டுகள் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவது வாக்காளர்கள் கடமை என்றும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார். மேலும், கடந்த 5 ஆண்டுகள் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு அவர் வாக்கு சேகரித்தார்.







