’கிரிக்கெட் கற்றுத் தருவது என்னுடைய பல நாள் ஆசை’ – மனம் திறந்த அஷ்வின்!

மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் கற்றுத் தர வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில்…

மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் கற்றுத் தர வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை மேயர் மகேஷ் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள் : இன்று மாலை வெளியாகிறது PS2 படத்தின் ‘சிவோஹம்’ லிரிக்கல் பாடல்!

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், ”மாணவர்களுக்கு கிரிக்கெட் கற்றுத் தருவது என்னுடைய பல நாள் ஆசையாக இருந்தது. பயிற்சி பெற விரும்பும் பல மாணவர்களுக்கு அதற்கான உபகரணங்கள் வாங்க முடியாது சூழல் இருந்தது. ஆனால் இப்போது நம்முடைய அமைச்சரின் முயற்சியால் அந்த நிலை மாறியுள்ளது.

இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி. மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பயிற்சி எடுத்து, கிரிக்கெட் விளையாடி, சிஎஸ்கே அணிக்காக கூட எதிர்காலத்தில் விளையாடலாம். பெண்கள் கிரிக்கெட் குழு கூட இப்போது உள்ளது. அதிலும் நீங்கள் சிறந்து விளங்கலாம். எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.