ஆரணி: தாடியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களை வெளியில் அனுப்பிய ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானப்பகுதியில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளன. இங்கு மூன்று பள்ளி மாணவர்கள் ஒருவர்வொருவராக மாறி மாறி முகத்தில் உள்ள முடிகளை பிளேடால் சேவிங் செய்து கொண்டு இருந்தனர்.…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானப்பகுதியில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளன. இங்கு மூன்று பள்ளி மாணவர்கள் ஒருவர்வொருவராக மாறி மாறி முகத்தில் உள்ள முடிகளை பிளேடால் சேவிங் செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது வீடியோ ஆதாரங்களுடன் அந்த மாணவர்களை விசாரித்தபோது, அவர்கள் ஆரணி டவுன் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும் தாடியுடன் சென்றதால் சேவிங்க் செய்து வருமாறு ஆசிரியர் கூறியதால் நாங்கள் இங்கு சேவிங் செய்துகொண்டு இருக்கிறோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இங்கு ஏன் சேவிங் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு சலூன் கடையில் ஒரு சேவிங்க்கு 20 ரூபாய் ஆகும் என்பதால் எங்களிடத்தில் போதிய பணம் இல்லாததால் ஒரு பிளேடு விலை 20 ரூபாயில் நாங்கள் மூன்று பேரும் மாறி மாறி சேவிங் செய்துகொள்ள இங்கு வந்தோம் என்று மாணவர்கள் கூறினர்.

அண்மைச் செய்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை- ஓபிஎஸ் பேட்டி

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: மாணவர்களின் ஒழுக்கத்தை கண்டிப்பாக கண்காணித்து வருகிறோம். அப்போதுதான் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி தரத்தை உயர்த்த முடியும்.  மாணவர்களை எந்த விதமாகவும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்துவது இல்லை. அப்படி இல்லையெனில் பெற்றோர்களை வரவைத்து அவர்களிடத்தில் மாணவர்களின் ஒழுக்கங்கள் குறித்து வலியுறுத்துவோம். இவ்வாறு மகேஸ்வரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.