மதுரையில் நியூஸ்7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி

நியூஸ் 7 தமிழ் சார்பாக மதுரை மாநகரில் 25 மற்றும் 26ம் தேதிகளில் மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. பணிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில்…

நியூஸ் 7 தமிழ் சார்பாக மதுரை மாநகரில் 25 மற்றும் 26ம் தேதிகளில் மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது.

பணிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் பல மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே மாணவர்களுக்கு மேற்படிப்பு சார்ந்த கல்வி வழிகாட்டு முகாம்கள் அடங்கிய மாபெரும் கல்வி கண்காட்சியை மதுரை மாநகரில் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.

மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறும் இந்த “கல்வி கண்காட்சி “ நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.  உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மாணவர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம்.

இந்த கல்வி கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவெனில் பிரபல கல்லூரிகளின் ஸ்டால்கள், வங்கியில் கல்வி கடன் பெற ஆலோசனை, +2 தேர்வு முடிவதற்கு முன்பே கல்வி உதவிக்கு பதிவு செய்வது, +2 தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நிச்சய கல்வி உதவித் தொகை,  மேற்படிப்பு குறித்து தன்னம்பிக்கை பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் இந்த கல்வி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூஸ் 7 தமிழின் இந்த கல்வி கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார், கடல்சார் மற்றும் பொறியியல் கல்வி ஆலோசகர் கே.கலைமணி, வெளிநாட்டு கல்வி ஆலோசகர் சிவபிரகாசம் ராமன், கிங்ஸ் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் எம்.பூமிநாதன் மற்றும் மேலூர் ஆர்டிஓ ஃபிர்தவ்ஸ் ஃபாத்திமா ஆகியோர் வருகை தர உள்ளனர்.

நாளை நடைபெறும் கல்வி கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜீஆர் சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் இந்த கல்வி கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நியூஸ்7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் வரவேற்புரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய பறையிசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. கல்வி கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.