வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும்போது அதற்கான வரி செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம் என்பவர் ஆன்மிக சுற்றுலாவுக்காக 2017 ஆம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது, 1,594 கிராம் தங்க நகை அணிந்தும், 112 மதுபாட்டில் எடுத்து வந்தபோது சுங்க துறை அபராதம் விதித்து உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை எதிர்த்து சந்திரசேகரம் விஜயசுந்தரம் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 2016ஆம் ஆண்டு புதிய விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும். மேலும், சுங்க வரித் துறை உத்தரவில் எந்தவிதமான தவறும் இல்லை என்று கூறி நீதிபதி சரவணன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா