மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற…

மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டத்தில், கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி, மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விதிக்கப்படும் 12 சதவீத வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றுக்குச் சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் உள்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியி லிருந்து முழுமையாக விலக்களிக்கத்திருக்க வேண்டும். உடனே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது. பரிந்துரைக்குழுவினை உருவாக்கி இருப்பது அதிருப்தியளிக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.