முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து, மாணவர்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, அவர்களது உடல்நலனும் முக்கியம் என முதலமைச்சர் தெரிவித்ததாக அன்பில் மகேஷ் தெரிவித்தார். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களிடம் இன்றும் நாளையும் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வு குறித்து முதலமைச்சர் 2 நாட்களில் முடிவெடுப்பார் என்றும் அன்பில் மகேஷ் கூறினார்.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்

Gayathri Venkatesan

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

Karthick

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!

Karthick