டிச.15ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வரி வசூல் – ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இணையதளம் மூலம் மட்டுமே வரி வசூல் நடைபெறும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, தொழில்…

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இணையதளம் மூலம் மட்டுமே வரி வசூல் நடைபெறும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, தொழில் கட்டணம், குடிநீர் கட்டணம், விளம்பர வரி உட்பட அனைத்து வரிகளுமே இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை முன்னிட்டு வரியை இணைய வழியில் செலுத்துவதற்கான பயிற்சி ஊராட்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகமே மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பணம் வசூலிக்கக் கூடாது எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.