2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. அதன்படி இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எ.வ.வேலு,
|”திமுக அரசு கொண்டுவந்த பங்களிப்பு ஓய்வூதி திட்டத்தை தகர்த்து பழைய ஓய்வூதி திட்டம் நிறைவேற்றப்படும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்கிறதா அல்லது பங்களிப்பு அமல்படுத்தப் போகிறீர்களா என கேள்வி எழுப்பி உள்ளார்.
பல முதலமைச்சர்கள் இந்த தற்போதைய செயல்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்தன ஆனால் நாமக்கல் கவிஞர் மாளிகையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு தற்போதைய முதலமைச்சர் அலுவலகம் அமைக்கப் போகிறார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அறை அமைப்பதற்கு டெண்டர் முறைகேடு இருப்பதாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதனைப் பற்றி விளக்கும் வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து பத்திரிக்கை செய்திகளை எடுத்து போட்டால் இந்த துறை ஒரு நாள் கூட தாங்காது. முதலமைச்சர் அறை அமைக்கப்படுவது தொடர்பாக டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பத்திரிக்கை செய்தி தவறானது.
கடந்த ஆட்சியில் பல்வேறு பணிகளுக்காக விடப்பட்ட ஒப்பந்தங்கள் மறு மதிப்பீடு செய்வது தற்போது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்த மதிப்பீடு வந்துள்ளது அதற்கான ஆவணங்களை வெளியிடுகிறேன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதிதாக தலைமைச் செயலக கட்ட வேண்டும் அதற்குக் காரணம் புதிய இடம் பற்றாக்குறை உள்ளது காரணமாக தான். முதலமைச்சர் அலுவலகம் நூறு பேரு கூட அமர்ந்து வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தில் முறையான கழிவறை வசதி இல்லை.” என்று விளக்கம் அளித்தார்.




