கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இதுகுறித்து பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், “சம்பவம் நடந்த பகுதி கர்நாடக சட்டமன்ற உறுப்பினரே இதில் ஏதோ இருக்கிறது…

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இதுகுறித்து பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், “சம்பவம் நடந்த பகுதி கர்நாடக சட்டமன்ற உறுப்பினரே இதில் ஏதோ இருக்கிறது என்று உயிரிழந்த விவசாய குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடைபெற்றது என கர்நாடகா அரசு விளக்கம் கொடுத்துள்ளது. எந்த ஒரு உரிமை மீறிலும் இல்லை என கர்நாடக சட்டப்பேரவையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் உயிரிழப்புக்கு நியாயமான விசாரணை தேவை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு 15 லட்சம் ரூபாய் போதுமான இழப்பீடு இல்லை, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மாட்டை தேடி தான் சென்றார்களே தவிர மானை தேடி செல்லவில்லை, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எம்.எல்.ஏ தாரகை கத்பட், “தமிழர்கள் ஒரு இளக்காரமாக மாறிவிட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். உயிருக்கு போராடி வரும் தமிழரின் மருத்துவ செலவை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். உயிரிழந்த மூன்று விவசாயிகளுக்கு அரசு வேலை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும்.” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.