தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. பின்னர், தொற்று குறைந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முதல்கட்டமாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் 5ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 6 மணி முதலே, வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் அதிகாலை முதலே தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.