கோவில்களில் சாதிய பாகுபாடு கடைபிடிக்க கூடாது: எம்எல்ஏ சிந்தனை செல்வன்

பெரிய கோயில்கள் மட்டுமல்லாமல், சிறிய கோயில்களிலும் சாதிய பாகுபாடு இல்லாத நிலையை கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில்…

பெரிய கோயில்கள் மட்டுமல்லாமல், சிறிய கோயில்களிலும் சாதிய பாகுபாடு இல்லாத நிலையை கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், இந்தியாவிற்கே நம்பிக்கை தரும் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார்.

மேலும், இந்து அறநிலையத்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தத் திட்டங்கள் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகவும், குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ் வழியில் கோயிலில் வழிபாடு என்ற அறிவிப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பெரிய கோவில்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள சிறிய கோயில்களிலும் சாதியப் பாகுபாடு இல்லாத நிலையை கடைபிடிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் , பட்டியல் இனத்தவருக்கு தேசிய ஆணையம் உள்ளது போல், தமிழகத்தில் மாநில ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகள் அருகே சிசிடிவி கேமராக்கள் அமைத்து, சிலைகளை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என எம்எல்ஏ சிந்தலை செல்வன் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.