வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், உடல் எடை குறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும், நிலையில், அது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது
மர்ம தேசமான வடகொரியா நாட்டின் அதிபராக, 37 வயதான கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அதிபராக பதவியேற்றது முதல், கிம் ஜாங்கின் உடல் எடை, தொடர்ந்து அதிகரித்து வந்தது. உடல் பருமன் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிம் ஜான் உன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில், கிம் ஜாங் உன் உடல் மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறார். இதனால், கிம் ஜாங் உன், தாமாகவே உடல் எடையை குறைத்திருக்கலாம் என்றும், உடல் நலக்குறைவு காரணமாக எடை குறைந்திருக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
எனினும், அரசு தரப்பில் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதிபரின் உடல் எடை குறைந்துள்ளதால், தாங்கள் கவலையில் ஆழ்துள்ளதாக அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.







