தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் ; தேர்தல் ஆணையம் அதிரடி…!

தமிழ் நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இம்மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 5ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ் நாடு அரசின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது. அதன் படி தற்போது தமிழ் நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், தமிழ் நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக செயல்பட்டு வரும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு அப்பொறுப்பில் சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.