முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோரை புல் விலை உயர்வு, பாய் நெசவாளர்கள் பாதிப்பு!

கோரை புல் விலை ஏற்றத்தின் காரணமாக ஓமலூரில் கோரைப் பாய் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரைப் பாய் தயாரிப்பு தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுவாக கோடை காலத்தில் கோரைப் பாய் விற்பனை நகரப் பகுதியில் அதிகளவு இருக்கும். இந்நிலையில் நாமக்கல், கரூர், முசிறியில் காவிரிப்படுகையில் கிடைக்கும் கோரை புற்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கட்டு கோரை புல்லின் விலை ரூ 1,500 ரூபாய் இருந்த நிலையில் 1,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் கோரைப்பாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஓமலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள சிக்கணம்பட்டி தாராபுரம் செம்மாண்டப்பட்டி கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரைப் பாய் தயாரிப்பு தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த தறி கூடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே கோரைப் பாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாமக்கல், கரூர், முசிறியில் காவிரிப்படுகையில் கிடைக்கும் கோரை புற்களின் விலை உயர்ந்துள்ளதால் தறி கூடங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

கோரைப் பாய் செய்யும் மூலப்பொருட்களுக்கு ஏற்ப கோரைப்பாய் விலை ஏற்றம் இல்லை இதனால் நஷ்டம் அடையும் கோரை பாய் உற்பத்தியாளர்கள் சிறுக சிறுக கோரைப்பாய் உற்பத்தியை நிறுத்தி வருகின்றனர். விலை உயர்வின் காரணமாக கோரைப்பாய் உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

நியாய விலைக் கடைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்!

Halley karthi

புதிய அரசுக்காக தயாராகும் தலைமைச் செயலகம்!

Ezhilarasan

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி!

Niruban Chakkaaravarthi