முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் 36 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் முப்பதாயிரத்தைக் கடந்த இந்த தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு குறையவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 36,184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,தமிழகத்தில் இதுவரை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 ஆயிரத்து 478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 76 ஆயிரத்து 761 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 5913 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 109 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 4590 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 2226 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1145 பேருக்கும் திருவள்ளூரில் 1667 பேருக்கும் திருச்சியில் 1331 பேருக்கும் கோவையில் 3243 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

Advertisement:

Related posts

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

Niruban Chakkaaravarthi

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

Niruban Chakkaaravarthi

கொரோனா 2-வது அலையின் தாக்கம் எப்போது குறையும்?