செய்திகள்

’மெட் ஆல்’ ஆய்வக கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து!

பிரபல தனியார் ஆய்வகமான ’மெட் ஆல்’ ஆய்வகத்தின், கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையங்கள் உள்ளன. இதில் மெட் ஆல் என்ற பிரபலமான தனியார் நிறுவன ஆய்வகமும் ஒன்று. இந்த ஆய்வகங்கள் தங்கள் பரிசோதனை விவரங்களை, ஐசிஎம்ஆர் பதிவேட்டில் தினமும் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் 34,875 பேருக்கும், நேற்று 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐசிஎம்ஆர் பதிவேட்டில் மெட் ஆல் மேற்காட்டிய இரண்டு நாட்களிலும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டிவ் என காட்டி, இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அந்த மையத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள மெட் ஆல் கிளையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானோரை, கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்களாக தவறாகப் பதிவிட்டது தெரியவந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கம் தருமாறும் மெட் ஆல் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement:

Related posts

பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்!

Karthick

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: எம்.எல்.ஏக்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Vandhana

பாஜக எம்.பி. ராம் சுவரூப் தூக்கிட்டு தற்கொலை!

Gayathri Venkatesan