முக்கியச் செய்திகள் மழை இந்தியா

சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட கரையோர பகுதிகளில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் அதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தொண்டர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ரூ.200 கோடி மோசடி வழக்கு: பிரபல நடிகை திடீர் கைது

Ezhilarasan

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Ezhilarasan

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே சோதனை: கே.சி.வீரமணி 

Ezhilarasan