தலைநகர் டெல்லியில் தீவிரமடைந்து வரும் கொரோனா நோய்த்தொற்றால், கடந்த ஆறு நாட்களில் மட்டும் 1,506 பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 6,60,611 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 1,506 பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக ரெட் சோன் பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவலை கட்டுபட்டுத்த தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெல்லி விமான நிலையத்தில், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு பெரும்பாலும் இளைஞர்களுக்கு அதிகமாக பரவிவருவதாகவும் அவர்கள் மூலம் முதியவர்களுக்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.







