திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த மேடவாக்கத்தில் திமுக தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் பேசிய அவர், அதிமுக ஆட்சியின்போது, கொரோனா தடுப்பூசிகளை அதிகம் வீணாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், தற்பொது திமுக ஆட்சியில் தடுப்பூசியை வீணக்காமல் பயன்படுத்தி அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.