இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளும் முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறுநீரக சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து…

கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளும் முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறுநீரக சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளதாகவும், இதனால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், 80 சதவீத முன்கள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்திக்கொண்டுள்ள நிலையில், 2-ம் தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், முன்கள பணியாளர்கள் அனைவரும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.