தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக – தேமுதிக கூட்டணி, மநீம-சமக-ஐஜேகே கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. இதில், 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணிக்கு அடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தது. பின்னர், 2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நான்காம் இடம் பெற்றது.
2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது. இந்நிலையில், தேர்தலில், அமமுக மற்றும் மநீம கூட்டணிகளை பின்னுக்குத் தள்ளி, நாம் தமிழர் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இது அந்த கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.