முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், 1,60,306 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26,07,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,816 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 25,54,323 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,814 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 175 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 211 பேர், குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 216 பேருக்கும்,  ஈரோட்டில் 115 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. அதிகபட்சமாக கோவை, ஈரோடு, தஞ்சாவூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்!

Ezhilarasan

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!

Halley karthi