புதுச்சேரியில் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது, விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மூடப்படுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும்அவர் தெரிவித்தார். மேலும், இலவச அரிசி வழங்க ரூ.197.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
]கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், உயர்கல்வித்துறைக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
இதே போல், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.








