சட்டசபையில் அமைச்சர் விஜய் பாலாஜி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் கதர் அங்காடிகள் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் விஜய் பாலாஜி புதிய அறிவிப்புகளை முன்மொழிந்தார். அப்போது பேசியவர், “கதர் அங்காடிகள் “கதர் வாரியத்தின் முகம்” என்பதை கருத்தில் கொண்டு அவற்றை நவீனப்படுத்துவது அவசியமாகும். அதன்படி ஏற்கனவே திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இயங்கும் கதரங்காடிகள் புதிய வடிவமைப்பு மற்றும் உட்புற அலங்காரங்களுடன் கூடிய நவீன அனுபவ அங்காடியாக ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.

கதர் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான நலநிதி பங்குத் தொகை 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் ஜவ்வாது மலைத்தேன் அலகு ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் மத்திய கதர் ஆணை குழு உதவியுடன் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் தூத்துக்குடி தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் வள்ளியூர் பனை பொருட்கள் இருப்பு கிடங்கு ஆகியவை ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்திற்குச் கூட்டுறவு சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.