முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,85,874 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 35,884 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,434 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 26,34,968 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 15,022 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 148 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவானோரே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை – எடியூரப்பா

Jeba Arul Robinson

பிரேத பரிசோதனைக் கிடங்கிற்குள் புகுந்து உடலை எடுக்க முயன்ற உறவினர்கள் கைது!

Jeba Arul Robinson

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!

Ezhilarasan