முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ள அமைச்சர்..

தமிழ்நாட்டில், நவம்பர் 1ம் தேதி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து, ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது இறுதித்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. வரும் 1ம் தேதி முதல், 1ம் வகுப்பு வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளி திறப்பு குறித்து, ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 21ம் தேதி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, மக்கள் பள்ளி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கருத்து கேட்கப்பட உள்ளது. ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பெங்களூரை வீழ்த்தியது தோனி படை: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் சிஎஸ்கே

Ezhilarasan

இந்தியா பிரதமருக்கு வங்கதேச பிரதமர் அனுப்பிய இரண்டாயிரத்து 600 கிலோ மாம்பழங்கள்!

Vandhana

மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Jeba Arul Robinson