ஓடும் காரில் தீ பற்றியதை பார்த்து அதில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சேதுராமன். இவர் தனது மனைவி மற்றும் 2 பேருடன் நேற்று மணலியில் இருந்து அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காரின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறி உடனடியாக கார் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட அவர்கள் உடனடியாக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு வேகமாக காரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதைக்கண்ட அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த வழியே சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி, அதிலிருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தக்க சமயத்தில் அந்த வழியே தண்ணீர் லாரி வந்ததால் உடனடியாக தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், போலீசார் உடனடியாக இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.







