தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தினசரி கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 7,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. எனினும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.