முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியவடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி ஓட்டுநரான இவருக்கு வசந்தா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் திருமணமான நிலையில், 16 வயதான இரண்டாவது மகள் பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

டேனிஸ்பேட்டை ஊராட்சி வாழையாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் லோகநாதன் (23). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரியவடகம்பட்டி பகுதியிக்கு சென்ற பேருந்தில் அந்த மாணவியும் லோகநாதனும் சந்தித்ததை அடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைத் கூறி அழைத்துச் சென்ற லோகநாதன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் மாணவியின் தாய் சாந்தா கொடுத்த புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

Saravana Kumar

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி!

Vandhana