#Chennai கடற்கரை – எழும்பூர் இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்! ஏன் தெரியுமா?

சென்னை கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நாளை நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குரவத்துக் கழகம்…

tamilnadu, chennai, Chennai Beach, Egmore

சென்னை கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நாளை நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

நாளை 27-10-24 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை யார்ட்டில் நடைபெற உள்ளதால், காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் – செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும்

இதையும் படியுங்கள் : முதன்முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி சாதனை! 12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி!

அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் 27-10-24 அன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது. கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.