இன்றே விக்கிரவாண்டி விரையும் விஜய்?… வெளியான புதிய தகவல்!

தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அக்கட்சித் தலைவர் விஜய், இன்று இரவே விக்கிரவாண்டி சென்று கேரவனில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள…

தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அக்கட்சித் தலைவர் விஜய், இன்று இரவே விக்கிரவாண்டி சென்று கேரவனில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பகுதியில், நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50,000 இருக்கைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வரும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற தேசிய தலைவர்ளுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வருகை தரும்
தொண்டர்களுக்கான உணவு ஏற்பாடு, மாநாட்டிற்கு பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் விஜய் இன்று இரவே மாநாடு பகுதிக்கு சென்று, கேரவனில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவு மாநாட்டு பணிகளை கண்காணிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.