தமிழ்நாடு பட்ஜெட்; நிலக்கோட்டை பூ விவசாயிகளின் கோரிக்கை

பூக்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு மற்றும் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுவித்துள்ளனர் நிலக்கோட்டை பூ விவசாயிகள். வேளாண் பட்ஜெட்டில் இதற்கு நிதி ஒதுக்க வேண்டும்…

பூக்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு மற்றும் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுவித்துள்ளனர் நிலக்கோட்டை பூ விவசாயிகள். வேளாண் பட்ஜெட்டில் இதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடியும், 2000 ஹெக்டர் பரப்பளவில் முல்லை, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒன்றுபட்ட மதுரை மாவட்டமாக இருந்தபோது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மல்லிகைதான் “மதுரை மல்லி” என்று அழைக்கப்பட்டது.

 நிலக்கோட்டை பூ விவசாயி

தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர்ச்சந்தைகளுள் முக்கியத்துவம் வாய்ந்த மலர்ச்சந்தை, நிலக்கோட்டை மலர்ச்சந்தைதான். இங்குள்ள மல்லிகைப் பூக்கள் அதிக மனம், நீண்ட நேரம் மலராமல் மொட்டாகவே இருக்கும் தன்மையை இயல்பாகவே கொண்டுள்ளது. இதனாலேயே நிலக்கோட்டை மலர்ச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்க விரும்புகின்றனர் வெளிமாநில விவசாயிகள்.

பூக்கள் வரத்து அதிகம் உள்ள காலங்களில் மிகக் குறைவான விலைக்கே குறிப்பிட்ட அளவு பூக்கள் கொள்முதல் செய்யப்படும். மீதமுள்ள பூக்கள் கீழே கொட்டப்படும் அவலம் நிலவுகிறது. உடல் உழைப்பு, பொருட்செலவு, அறுவடை நேரம் என விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவது தொடர் கதையாகவே உள்ளது என்று கூறுகின்றனர் விவசாயிகள். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் கோரிக்கையாக இது ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.