தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மல்லிகை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் மூன்று ஆயிரம் ஏக்கருக்கு மல்லிகை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கனமழையால் மல்லிகை செடிகளின் அரும்புகள் அழுகி விட்டதாக விவாசயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.







